மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல் வாணுதல் மங்கையர் இடத்தில் பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன் பொன்னடிக் காக்கும்நாள் உளதோ அருந்திட தருந்த அடியருள் ஓங்கும் ஆனந்தத் தேறலே அமுதே இருந்தரு முனிவர் பூகழ்செயூம் தணிகை இனிதமர்ந் தருளிய இன்பமே