மருளும் துயரும் தவிரும் படிஎன் மனமன் றிடைநீ வருவாய் அபயம் இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ் சினன்என் றிகழேல் அபயம் அபயம் வெருளும் கொடுவெம் புலையும் கொலையும் விடுமா றருள்வாய் அபயம் அபயம் அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம்