மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில் வருத்து கின்றனை மற்றெனக் குன்றன் அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப் பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின் பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே