மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால் இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின் அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே