மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை மனமுற நினைந்தகத் தன்பாம் பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் அன்பர்பால் இருந்திட அருளாய் தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ் தணிகைவாழ் சரவண பவனே