மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும் இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன் அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே