மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர் சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான் சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா