மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ மயக்கநீத் தருள்மருந் தென்கோ பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ பதச்சுவை அனுபவம் என்கோ சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே