மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன் பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே