மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச் சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே