மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள் இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக் குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என் முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே