மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக் கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப் பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப் பெம்மானே செங்கமலப் பிரானே இந்த இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே