மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண் இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால் உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன் றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே