மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே கலங்கு றேல்அருள் திருவெண்ணீ றெனது கரத்தி ருந்தது கண்டிலை போலும் விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே