மலஞ்சா திக்கும் மக்கள்தமை மருவார் மருவார் மதில்அழித்தார் வலஞ்சா திக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்ப்பதத்தார் நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே