மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம் சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே