மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே மந்திர மேஒளிர் மணியே நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த நேயனே தாயனை யவனே பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய் பரமனே பரமசிற் சுகந்தான் புலப்படத் தருதற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே