மலவா தனைதீர் கலவா அபயம் வலவா திருஅம் பலவா அபயம் உலவா நெறிநீ சொலவா அபயம் உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம் பலஆ குலம்நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் நலவா அடியேன் அலவா அபயம் நடநா யகனே அபயம் அபயம்