மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றோ தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன் நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே