மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான் திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே