மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால் நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே