மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின் நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன் அலைநீங்கின குழல்து஑ங்கின அகம்ஏங்கின அரைமேல் கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே