மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண் ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே