மாடொன் றுடையார் உணவின்றி மண்ணுன் டதுகாண் மலரோன்றன் ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் ஊரை மகிழ்வோ டுவந்தாலங் காடொன் றுடையார் கண்டமட்டுங் கறுத்தார் பூத கணத்தோடும் ஈடொன் றுடையார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே