மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர் சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின் ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக் காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே