மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக் காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன் வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக் கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ