மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன் கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே