மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார் காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார் சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே