மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப் பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே