மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப் பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப் புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந் தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ் சொரூபானந் தக்கடலே சோதித் தேவே