மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன் நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம் சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே