மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன் வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார் நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர் கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே