மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச் செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே