மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள் மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால் ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி