மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும் வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே