மானாகி மோகினியாய் விந்து மாகி மற்றவையால் காணாத வான மாகி நானாகி நானல்ல னாகி நானே நானாகும் பதமாகி நான்றான் கண்ட தானாகித் தானல்ல னாகித் தானே தானாகும் பதமாகிச் சகச ஞான வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே