மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும் மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப் பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர் நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே