மானினொடு மோகினியும் மாமாயை யுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம் தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய் மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே