மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன் வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன் ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக் கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல் கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய் ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய் இறைவன்அருட் பெருஞ்ஸோதிக் கினியபிள்ளை நானே