மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும் ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும் வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும் கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே