மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித் தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத் தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில் தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து