மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம் காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம் தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின் நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே