மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால் ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன் நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே