மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில் வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன் தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோ என் சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால் பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே