மாயையாற் கலங்கி வருந்திய போதும் வள்ளல்உன் தன்னையே மதித்துன் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவவே றெண்ணிய துண்டோ தூயபொற் பாதம் அறியநான் அறியேன் துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன் நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே நன்றருள் புரிவதுன் கடனே சாயையாற் தலைவரென் - படிவேறுபாடுகள் ஆ பா