மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம் மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல் நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல் தூயதிரு அருட்ஸோதித் திருநடங்காண் கின்ற தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே