மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்