Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1784
மாறா வழகோ டிங்குநிற்கும் 

வள்ள லிவரூ ரொற்றியதாம் 
வீறா முணவீ யென்றார்நீர் 

மேவா வுணவிங் குண்டென்றேன் 
கூறா மகிழ்வே கொடுவென்றார் 

கொடுத்தா லிதுதா னன்றென்றே 
யேறா வழக்குத் தொடுக்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :2714
மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.