மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும் மாமணியே ஆறுமுக மணியே நின்சீர் கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக் கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச் சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே