மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார் சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர் பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற் கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ